கும்பகோணம் பெண் பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடையவர்களின் ஜாமீன் மனுவை ரத்து செய்தும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனக்கு கணவர் கிடையாது. ஒரு மகன், மகள் உள்ளனர். எனது மகள் ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தாள். இதற்கிடையே, தீபாவளி தினத்தன்று கடை வேலைக்கு வருமாறு, கடையின் உரிமையாளர் எனது மகளை அழைத்துச்சென்றார்.
ஆனால், எனது மகளை கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகளின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் பொதுநல மனுவாக எடுத்துக்கொள்ளப்பட்டு, ஐகோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், ஆரம்பத்தில் இருந்தே போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாமல் உள்ள அதிகாரி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.
அவர்கள் விசாரணையை முடித்து கும்பகோணம் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 லட்சம் அந்த பெண்ணுக்கு இழப்பீடாக அரசு வழங்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அந்த பெண்ணுக்கும் அவரின் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி மற்றும் சின்னப்பா ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை ஜாமீன் வழங்க முடியாது. எனவே, அவர்களது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story