மும்பையின் 36 சட்டசபை தொகுதிகளில் 50.67 சதவீதம் வாக்குப்பதிவு தேர்தல் கமிஷன் அறிவிப்பு
மும்பையின் 36 சட்டசபை தொகுதிகளில் 50.67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
மும்பை,
மும்பையின் 36 சட்டசபை தொகுதிகளில் 50.67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
வாக்கு சதவீதம் குறைவு
மும்பையில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது 51.8 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட மும்பையில் 55.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் 50.67 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளன. இதனை நேற்று தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
ஆனால் இந்த வாக்குப்பதிவு சதவீதம் கடந்த 2009(46.1 சதவீதம்), 2004(48.4 சதவீதம்), 1999(44.9) ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும். மும்பை நகரில் உள்ள 10 தொகுதிகளில் 48.63 சதவீதமும், புறநகரில் உள்ள 26 தொகுதிகளில் 51.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதிகபட்சமாக பாண்டுப் மேற்கு தொகுதியில் 56.9 சதவீதமும், குறைந்தபட்சமாக கொலபாவில் 40.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தொகுதி வாரியாக மும்பையில் பதிவான வாக்குப்பதிவு விவரங்கள் வருமாறு:-
மும்பை நகரம்
1. தாராவி- 47.79
2.சயான் கோலிவாடா- 50.75
3.வடலா- 53.08
4.மாகிம்- 53.20
5.ஒர்லி- 50.20
6.சிவ்டி- 49.48
7.பைகுல்லா- 51.10
8.மலபார்ஹில்- 47.24
9.மும்பாதேவி- 44.71
10.கொலபா- 40.20
மேற்கு புறநகர் தொகுதிகள்
11. போரிவிலி- 54.20
12.தகிசர் 53.17
13. மகாதானே- 55.83
14.ஜோகேஸ்வரி கிழக்கு- 52.89
15.தின்டோஷி- 54.12
16.காந்திவிலி கிழக்கு- 50.11
17.சார்கோப்- 52.92
18.மலாடு 55.37
19. கோரேகாவ் கிழக்கு- 46.67
20.வெர்சோவா- 42.66
21.அந்தேரி மேற்கு- 43.22
22.அந்தேரி கிழக்கு- 53.65
23.வில்லேபார்லே- 52.65
24.கலினா- 50.20
25.பாந்திரா கிழக்கு- 50.65
26.பாந்திரா மேற்கு 43.76
கிழக்கு புறநகர் தொகுதிகள்
27.முல்லுண்டு- 53.20
28.விக்ரோலி- 55.54
29.பாண்டுப்- 56.93
30.சாந்திவிலி- 52.33
31.காட்கோபர் மேற்கு- 55.03
32.காட்கோபர் கிழக்கு- 50.53
33.மான்கூர்டு சிவாஜிநகர்- 44.82
34.அணுசக்திநகர்- 55.30
35.செம்பூர்- 52.47
36.குர்லா- 45.30
வாக்குப்பதிவு அதிகமான தொகுதிகள்
இதில் அணுசக்திநகர், சாந்திவிலி ஆகிய தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது.
அணுசக்தி நகரில் கடந்த 2014 தேர்தலில் 46.7 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவாகி உள்ளது. தற்போது 55.3 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. இதேபோல சாந்திவிலியில் கடந்த தேர்தலில் 44.3 சதவீதமும், தற்போது 52.3 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.
இதுதவிர செம்பூர், மான்கூர்டு சிவாஜிநகர், காட்கோபர் மேற்கு, பாண்டுப், விக்ரோலி, போரிவிலி, தகிசர், மகாதானே, தின்டோஷி, சார்கோப், மலாடு கிழக்கு, வெர்சோவா, அந்தேரி கிழக்கு, பாந்திரா கிழக்கு ஆகிய 14 புறநகர் தொகுதிகளிலும் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story