வானவில் : குளிர் காலத்துக்கேற்ற மெத்தைகள்
குளிர்காலத்தில் மெத்தையும் ஜில்லென்று ஆகிவிடும். இந்த சமயங்களில் நமது தூக்கம் தடைபடும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாத வகையில் புதிய சாதனத்தை உருவாக்கிஉள்ளது ஜியோமி நிறுவனம்.
ஸ்மார்ட்போன்கள், டி.வி., வாக்குவம் கிளனர் என அடுத்தடுத்து வீட்டு உபயோக மின்னணு சாதனங்களை காட்சிப்படுத்திவரும் ஜியோமி தற்போது கதகதப்பை தரும் மெத்தைகளை உருவாக்கிஉள்ளது. வெளியில் கடுமையான குளிர் சூழல் நிலவினாலும் இந்த சாதனம் கதகதப்பை அளித்து நிம்மதியாக தூங்க வழிவகுக்கும்.
ஜியோமி நிறுவனத்தின் கிரவுட் பண்ட் நிறுவனமான சைனிடெக்ஸ் இந்த ஸ்மார்ட் டெம்பரேச்சர் கட்டுப்பாடு கொண்ட மெத்தைகளை உருவாக்கிஉள்ளது. இந்த மெத்தையானது பல்வேறு அடுக்குகளைக் கொண்ட பிளாங்கெட்டால் ஆனது. இதில் பல அடுக்கு பஞ்சு உள்ள இதன் நடுப்பகுதியில் பி.வி.சி. பைப் உள்ளது. இந்த பி.வி.சி. பைப் மூலம் வெப்பமான காற்று மெத்தை முழுவதும் பரவி கதகதப்பை அளிக்கும். மின்சார வயர்கள் ஏதும் மெத்தைக்கு அடியில் கிடையாது.
இதனால் மின்சாரம் குறித்தோ, கதிர்வீச்சு குறித்தோ அச்சமடையத் தேவையில்லை. மேலும் 12 வகையான பாதுகாப்பு அம்சங்கள் இதில் பின்பற்றப்பட்டுள்ளன.
இதனால் நீர் கசிவு போன்ற பிரச்சினை இருக்காது. இந்த சாதனத்தை இயக்காமல் 15 மணி நேரம் இருந்தால் அது தானாகவே அணைந்துவிடும். இதன் செயல்பாடுகளை ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்த முடியும்.
இதில் வெப்ப நிலையை 25 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை நிர்ணயிக்கலாம். அதிக கதகதப்பை ஏற்படுத்தும்போது மெத்தையில் உள்ள ‘பெட்பக்’ எனப்படும் சிறிய பூச்சிகளும் இறந்துவிடும். பூஞ்சைகள் உருவாவதும் தடுக்கப்படும். இதன் விலை சுமார் ரூ.14,250.
Related Tags :
Next Story