பதுவம்பள்ளி ஊராட்சியில் ரூ.1¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி - வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


பதுவம்பள்ளி ஊராட்சியில் ரூ.1¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி - வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Oct 2019 3:45 AM IST (Updated: 23 Oct 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

பதுவம்பள்ளி ஊராட்சியில் ரூ.1¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கருமத்தம்பட்டி,

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சியில் தென்னம்பாளையம்-அன்னூர் சாலையில் சுண்டமேடு முதல் செலம்பராயன்பாளையம் வரையும், கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் மோளகாளிபாளையம் வரை படுமோசமாக காட்சியளித்தது.

இந்த சாலைகளை சீரமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி இந்த சாலைகளை சீரமைக்க பாரத பிரதம மந்திரி மேம்பாட்டுத்திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணி தொடக்க விழா செலம்பராயன்பாளையத்தில் நடந்தது.

முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதப்பூர் பாலு, மாவட்ட கவுன்சிலர் தோப்பு க.அசோகன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயா, கவுசிகாநதி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதுவம்பள்ளி செந்தில் வரவேற்றார். விழாவில் சூலூர் எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமி கலந்து கொண்டு ரூ.1¼ கோடியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மோப்பிரிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் தெப்பீஸ்வரன், முன்னாள் துணைத்தலைவர் சசிக்குமார், பதுவம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் தனபாக்கியம் செந்தில், முன்னாள் துணைத்தலைவர் சிவக்குமார், தோட்டக்கலைத்துறை அதிகாரி சேகர், கிராம நிலவள கூட்டுறவு வங்கி செயலாளர் நாகராஜ், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மற்றும் மகேந்திரன், பாலு, ராக்கியப்பன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story