மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்


மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:30 PM GMT (Updated: 23 Oct 2019 7:20 PM GMT)

மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் குண்டவெளி ஊராட்சி மீன்சுருட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் வடிகால் சரியில்லாததால் சாலையில் பல இடங்களில் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக .மீன்சுருட்டி கடை வீதி, பஸ்நிறுத்தம், செல்லியம்மன் கோவில் செல்லும் சாலை, புதுத்தெரு அருகே மற்றும் தோப்புத் தெரு செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி, சாலையில் நின்று பஸ்சில் ஏறக்கூடமுடியாத நிலை உள்ளது. சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story