கற்பழிப்பு வழக்கில் வாலிபரின் தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு ரத்து செய்தது சம்பவத்தின் போது அவர் சிறுவன் என்பதால் நடவடிக்கை


கற்பழிப்பு வழக்கில் வாலிபரின் தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு ரத்து செய்தது சம்பவத்தின் போது அவர் சிறுவன் என்பதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்பு வழக்கில் வாலிபரின் தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

மும்பை, 

கற்பழிப்பு வழக்கில் வாலிபரின் தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

தூக்கு தண்டனை

பெண் ஒருவரை கற்பழித்து கொன்ற வழக்கில் சந்திப் சிர்சாத் என்ற வாலிபருக்கு செசன்ஸ் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து இருந்தது. அந்த தண்டனையை எதிர்த்து சந்திப் சிர்சாத் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், சம்பவம் நடந்த போது, தான் 17 வயதுக்குட்பட்ட சிறுவன் எனவும், தனக்கு தவறாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

தண்டனை ரத்து

அவரது தரப்பில் ஆதாரமாக பள்ளி சான்றிதழில் உள்ள அவரது பிறந்த தேதி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், சம்பவத்தின் போது அவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என எலும்பு பரிசோதனை மூலம் செசன்ஸ் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, பள்ளி சான்றிதழில் உள்ள பிறந்த தேதியின்படி சம்பவத்தின் போது, அவர் சிறுவன் என்பதை ஏற்க வேண்டி உள்ளதாக தெரிவித்தது.

மேலும் சந்திப் சிர்சாத்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு கூறியது.

Next Story