பண்டிகை முன்பணம் வழங்காததை கண்டித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பண்டிகை முன்பணம் வழங்காததை கண்டித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 3:30 AM IST (Updated: 24 Oct 2019 8:10 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று தொழிலாளர்களின்ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

தீபாவளி பண்டிகையையொட்டி 1 மாதத்துக்கு முன் வழங்க வேண்டிய பண்டிகை முன்பணம் வழங்காததை கண்டித்தும், போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களை அரசு அழைத்து பேசாமல் காலம்தாழ்த்தி அறிவித்திருப்பதை கண்டித்தும் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று தொழிலாளர்களின்ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. பணிமனை செயலாளர் ஜான்ராஜன், தொ.மு.ச. தலைவர் தங்க செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொ.மு.ச. சார்பில் சிதம்பரம், சி.ஐ.டி.யு. சார்பில் பகவதியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆதிலிங்கம், பகவதிகண்ணுபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ராணித்ேதாட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக 1-வது பணிமனை முன்பு தொ.மு.ச. பொருளாளர் கனகராஜ் தலைமையிலும், 2-வது மற்றும் 3-வது பணிமனைகளின் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனைகள், அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடைெபற்றன.

Next Story