மாவட்ட செய்திகள்

கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் சிலை மீட்பு திருடி வந்து வீசப்பட்டதா? போலீசார் விசாரணை + "||" + Andhra statue found in sewage canal in Kumbakonam stolen? Police are investigating

கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் சிலை மீட்பு திருடி வந்து வீசப்பட்டதா? போலீசார் விசாரணை

கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் சிலை மீட்பு திருடி வந்து வீசப்பட்டதா? போலீசார் விசாரணை
கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் உலோக சிலை மீட்கப்பட்டது. அந்த சிலை திருடி வந்து கால்வாயில் வீசப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். நகர் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயை நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கால்வாயில் சாக்குப்பை ஒன்று கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த சாக்குப்பையை கால்வாயில் இருந்து வெளியே எடுத்து வந்து பிரித்து பார்த்தபோது அதில் 2 அடி உயரம் கொண்ட ஆண்டாள் உலோக சிலை இருந்தது. இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன்பேரில் கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி, துணை போலீஸ் சூப்பரண்டு ஜெயச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் விமல், கிராம நிர்வாக அதிகாரி சுரேந்தர் ஆகியோர் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து சிலை கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உலோக சிலை பட்டறையில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். திருடிய சிலையை பதுக்கி வைப்பதற்காக கழிவு நீர் கால்வாயில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த சிலை திருடப்பட்ட சிலையா? எங்கிருந்து திருடப்பட்டது? திருடியவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரம்: திருவள்ளுவர் சிலையை கண்காணிக்க 3 கேமராக்கள்
தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிலையை கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
2. தஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி
தஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த வீதியில் மக்கள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
3. திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம், காவி துண்டு அணிவிப்பு அர்ஜூன் சம்பத் கைதாகி விடுதலை
தஞ்சை அருகே அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம், காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
4. பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது
நடிகர் கமல்ஹாசனின் தந்தை வக்கீல் சீனிவாசன் சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது. கமல்ஹாசன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.
5. விஜயதசமியையொட்டி கன்னியாகுமரி கடலில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு
விஜயதசமியையொட்டி முக்கடல் சங்கமத்தில் 2½ அடி உயர துர்க்கை அம்மன் சிலை கடலில் கரைக்கப்பட்டது.