தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள்
தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் பிள்ளைகள் பயனடையும் வகையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
சென்னை,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாடநூல் உதவித்தொகை ஆகிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை ஊதியமாக பெறும் தொழிலாளர்கள் இத்திட்டங்களுக்காக விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய படிப்புகளுக்கு பட்டய படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், மேல்நிலை கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்விக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பொதுத்தேர்வில் முதல் 10 இடங்கள் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 10-ம் வகுப்புக்கு ரூ.2 ஆயிரமும், 12-ம் வகுப்புக்கு ரூ.3 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க உதவித்தொகையாக மேல்நிலை கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.1,000 முதல் ரூ.3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண்-718, தேனாம்பேட்டை, சென்னை-6’ என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story