நாகூர் அருகே பரிதாபம்: கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
நாகூர் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
நாகூர்,
நாகை மாவட்டம், நாகூர் பெருமாள் கீழவீதியை சேர்ந்தவர் காமராஜ்(வயது70). தையல் தொழிலாளி. இவரது மனைவி மாலா(65). இவர்களுக்கு சத்தியசீலன், கண்ணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கண்ணன் சென்னையில் வேலைபார்த்து வருகிறார். சத்தியசீலன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை காமராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாலாவும், சத்தியசீலனும் உடனடியாக காமராஜை ஆட்டோவில் ஏற்றி கொண்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது காமராஜ் மயக்கமடைந்தார். இதனை பார்த்த மாலாவும் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து 2 பேரையும் சத்தியசீலன் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சத்தியசீலன் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள், பொதுமக்கள் காமராஜ், மாலா ஆகியோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் நாகூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story