பெட்டிக்கடையை காலி செய்ய சொன்னதால் பரிதாபம்: நெல்லையில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் பெட்டிக்கடையை காலி செய்ய சொன்னதால் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
நெல்லையில் பெட்டிக்கடையை காலி செய்ய சொன்னதால் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாற்றுத்திறனாளி
பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50), மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி சங்கிரி. இவர்களுக்கு ஜோதி கோகிலா (15), தர்ஷினி (11) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஜோதி கோகிலா 11-ம் வகுப்பும், தர்ஷினி 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ராமச்சந்திரன் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். தற்போது சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதனால் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து பெட்டிக்கடையை காலி செய்யு மாறு ராமச்சந்திரனிடம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மாற்றுக்கடை கேட்டு ராமச்சந்திரன் நெல்லை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் மனு கொடுத்தார். மேலும், அவர் விரக்தியடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு தனது பெட்டிக்கடையில் ராமச்சந்திரன் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை கடைக்கு அவருடைய அண்ணன் செல்வராஜ் வந்தார். அங்கு தம்பி தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். கடையை காலி செய்ய சொன்னதால் விரக்தியடைந்த மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story