மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்,
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், போனஸ், கருணைத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மின்வாரியதலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட தலைவர் ஆதிமூலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஆவுடையப்பன், பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மேலும் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர் அனைவருக்கும் மின்வாரிய வைரவிழா பயனாக 3 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்தியாகப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு மின் ஊழியர் சி.ஐ.டி.யூ. மத்திய அமைப்பின் நிர்வாகியான தங்கராஜ் வாழ்த்தி பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், பெருமாள் சாமி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story