சித்தராமையாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியாது மந்திரி ஈசுவரப்பா ஆரூடம்


சித்தராமையாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியாது மந்திரி ஈசுவரப்பா ஆரூடம்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:00 AM IST (Updated: 25 Oct 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

சித்தராமையாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியாது என்று மந்திரி ஈசுவரப்பா ஆரூடம் தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா, 

சித்தராமையாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியாது என்று மந்திரி ஈசுவரப்பா ஆரூடம் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்காது

சிவமொக்கா நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் மந்திரி ஈசுவரப்பா கலந்துகொண்டார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறி வருகிறார். அவருக்கு மீண்டும் கர்நாடக முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு கிடைக்காது. கர்நாடகத்தில் முன்பு பா.ஜனதா பலமாக இருந்தது. இடையில் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால், பா.ஜனதா இரண்டாக பிரிந்து கர்நாடக ஜனதா கட்சி உருவானது. இதனால் தான் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

மக்களை ஏமாற்றும் தந்திரம்

பா.ஜனதா பிரியாமல் புதிதாக கர்நாடக ஜனதா கட்சி உருவாகாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்காது. சித்தராமையாவும் முதல்-மந்திரி ஆகியிருக்க மாட்டார். அவர் 5 ஆண்டுகள் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தும் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. ஆனால் தற்போது, எஸ்.சி., எஸ்.டி. மக்களின் நலனுக்காக பாடுபடுவதாக கூறுகிறார். மக்களை ஏமாற்றும் தந்திரத்தை சித்தராமையா கையாண்டு வருகிறார். இதனை மக்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்.

இதனால் சித்தராமையாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் பேரிடர் நிவாரண நிதியாக கர்நாடகத்திற்கு எவ்வளவு பணம் வந்தது என்பதை வைத்து முதல்-மந்திரிக்கு சித்தராமையா கடிதம் எழுத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story