தீபாவளி பண்டிகையையொட்டி கரூரில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை - போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்


தீபாவளி பண்டிகையையொட்டி கரூரில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை - போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 26 Oct 2019 3:45 AM IST (Updated: 26 Oct 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கரூரில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் திறந்து வைத்தார்.

கரூர், 

தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கரூரில் தீபாவளி பொருட்கள் வாங்க ஜவகர் பஜாரில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. பண்டிகையையொட்டி கடை வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஜவகர் பஜாரில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், சிறப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் பார்வையிட்டார்.

கடைவீதியில் 20 கண் காணிப்பு கேமராக்களும், 3 ஸ்பீடு டூம் கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கின்றன. மேலும் 3 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமும் அதில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

பொதுமக்கள் கோக்குவரத்து இடையூறுகள் இல்லாமல் இருக்க வேண்டி கரூர் நகரில் உள்ள ரெயில் நிலையம், ஈஸ்வரன் கோவில் மற்றும் லைட்ஹவுஸ் கார்னர் ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன் (டவுன்), சண்முகசுந்தரம் (பசுபதிபாளையம்), மாரிமுத்து (போக்குவரத்து பிரிவு) உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Next Story