வெள்ளகோவிலில் பெண் உடல் தோண்டி எடுப்பு: 2 நாள் போலீஸ் காவல் முடிந்து தாய்-மகள் சிறையில் அடைப்பு
வெள்ளகோவிலில் பெண் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து 2 நாள் போலீஸ் காவல் முடிந்ததையொட்டி தாய்- மகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெள்ளகோவில்,
திண்டுக்கல் மாவட்டம், ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி வசந்தாமணி (42). இந்த நிலையில் செல்வராஜ், தனது மனைவியுடன் தனது மகன் பாஸ்கரன் திருமண அழைப்பிதழ் கொடுக்க திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமாரவலசுவை சேர்ந்த அக்காள் கண்ணம்மாள் வீட்டுக்கு வந்தார்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. செல்வராஜூம், அவரது மனைவி வசந்தாமணியும் கண்ணம்மாள் வீட்டு அருகே கொன்று புதைக்கப்பட்டனர். இருவரையும் கண்ணம்மாள் அவரது மருமகன் நாகேந்திரன், சிலருடன் கொன்று புதைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கண்ணம்மாள், நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ, நாகேந்திரன் மனைவி பூங்கொடி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நாகேந்திரனின் தாய் ராஜாமணியும்(60) கடந்த 5 மாதங்களாக காணவில்லை என்று நாகேந்திரனின் அக்காள் நாகேஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் நாகேந்திரனின் மாமியாரிடம் விசாரித்த போது, சம்பந்தியை தானே கொன்று புதைத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து கோவை சிறையில் இருந்த கண்ணம்மாள் அவரது மகள் பூங்கொடி ஆகிய இருவரையும் போலீசார் 2 நாள் காவலில் எடுத்தனர். இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் வெள்ளகோவில் உத்தாண்டகுமாரவலசுவில் உள்ள கண்ணம்மாள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் காங்கேயம் தாசில்தார் புனிதவதி, வெள்ளகோவில் வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் கண்ணம்மாளும், அவரது மகள் பூங்கொடியும் ராஜாமணியை கொன்று புதைத்த இடத்தை காண்பித்தனர். உடனே அந்த இடத்தில் தோண்டி பார்த்த போது ராஜாமணியின் பிணம் எலும்புக்கூடாக இருந்தது. கோவை மருத்துவ கல்லூரி உதவிப்பேராசிரியர் டாக்டர் நந்தகுமார் உள்பட 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது கண்ணம்மாள், ராஜாமணியை அரிவாளால் வெட்டி கொன்று வீட்டு அருகே புதைத்ததாகவும், சம்பந்தியை கொன்றது தனது மகளுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று 2-வது நாளாக ராஜாமணி கொலை வழக்கு தொடர்பாக கண்ணம்மாளிடமும், அவரது மகள் பூங்கொடியிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 2 நாள் காவல் முடிந்ததையொட்டி நேற்று மாலை இருவரையும் போலீசார் கோவை அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.
ஒரே வீட்டில் 3 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்ணம்மாள் வீட்டை ஒருவித பீதியுடன் பார்த்து செல்கின்றனர்.

Related Tags :
Next Story