வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தென்காசி,
வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நகை-பணம் கொள்ளை
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் விசுவாச ராஜா. இவரது வீட்டில் கடந்த 18-1-2002 அன்று இரவு 10.15 மணிக்கு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன், அதே ஊரை சேர்ந்த முருகன் (வயது 42), அம்பையை சேர்ந்த வேலாயுதம் (59), அரிகேசவநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் (38), ஆலங்குளத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்ற தங்கராஜ் (47) ஆகியோர் அத்துமீறி புகுந்து வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், வேலாயுதம், ஆறுமுகம், ஸ்டீபன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மாரியப்பன் தலைமறைவாகிவிட்டார்.
ஜெயில் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த தென்காசி முதன்மை உதவி அமர்வு நீதிபதி காமராஜ், 4 பேருக்கும் தலா 5 ஆண்டுஜெயில் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.
Related Tags :
Next Story