தனுஷ்கோடியில் தடுப்புச்சுவர், நடைபாதை சீரமைப்பு பணிகள் நிறைவு; கொந்தளிப்பால் 2 கடல் ஒன்று சேர்ந்து காட்சியளிக்கிறது
தனுஷ்கோடி பகுதியில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அங்கு கடல் கொந்தளிப்பு காரணமாக 2 கடல் பகுதி ஒன்று சேர்ந்து காட்சி அளிக்கிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரையில் உள்ள தடுப்புச்சுவரின் ஒரு பகுதியும், சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையும் கடல் கொந்தளிப்பாலும், கடல் அரிப்பாலும் முற்றிலும் சேதமடைந்தது. அதனால் அரிச்சல்முனை வரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கம்பிப்பாடு கடற்கரை வரை மட்டுமே அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சேதமடைந்த தடுப்புச்சுவர், நடை பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பணிகள் நேற்றுடன் முழுமையாக முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது.
பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா என இரண்டு கடலும் ஒன்று சேர்ந்து காட்சியளித்து வருகிறது. அதிலும் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதியில் மணல் பரப்பாக காணப்பட்டு வந்த இடம் முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. கடல் கொந்தளிப்பு குறைந்த பின்பு தான் அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் வழக்கம் போல் சுற்றுலா பயணிகளும், அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story