புனே மாவட்டத்தில் பா.ஜனதா கூட்டணியை வீழ்த்திய தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி


புனே மாவட்டத்தில் பா.ஜனதா கூட்டணியை வீழ்த்திய தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 26 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

புனே மாவட்டத்தில் பா.ஜனதா கூட்டணியை வீழ்த்திய தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

புனே, 

புனே மாவட்டத்தில் பா.ஜனதா கூட்டணியை வீழ்த்திய தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

புனே தொகுதிகள்

புனே மாவட்டத்தில் உள்ள 21 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 11 இடங்களிலும், சிவசேனா 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தன.

இந்த சட்டசபை தேர்தலில் புனே கோத்ருட் தொகுதியில் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் போட்டியிட்டார். இதனால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதியானது. மேலும் புனேயில் மீண்டும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் வெற்றி

ஆனால் புனேயில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கடந்த தேர்தலில் பெற்றதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அந்த கட்சி ஏற்கனவே தங்கள் வசம் இருந்த பாராமதி, இந்தாப்பூர், அம்பேகாவ் ஆகிய 3 தொகுதிகளையும் தக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் வட்காவ்சேரி, கேட், ஆலந்தி, ஷருர், ஜூன்னார், பிம்பிரி ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.

இதேபோல காங்கிரஸ் ஏற்கனவே தங்கள் வசம் இருந்த போர் தொகுதியை தக்கவைத்து கூடுதலாக சிவசேனா வசம் இருந்த புரந்தர் தொகுதியையும் கைப்பற்றி உள்ளது. புனேயில் பா.ஜனதா 9 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. சிவசேனா தங்கள் வசம் இருந்த 3 தொகுதிகளையும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் பறிகொடுத்து உள்ளது.

Next Story