நடுவானில் என்ஜினில் கோளாறு: மும்பை விமானம் அவசரமாக தரையிறக்கம் பயணிகள் உயிர் தப்பினர்


நடுவானில் என்ஜினில் கோளாறு: மும்பை விமானம் அவசரமாக தரையிறக்கம் பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-கோயம்புத்தூர் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட என்ஜின் கோளாறால் அவசரமாக தரை இறக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

மும்பை, 

மும்பை-கோயம்புத்தூர் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட என்ஜின் கோளாறால் அவசரமாக தரை இறக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

என்ஜின் கோளாறு

மும்பை விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் தனியார் விமானம் ஒன்று நேற்று மதியம் 12.50 மணி அளவில் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் கோயம்புத்தூரில் 1.55 மணி அளவில் தரை இறங்கும்.

ஆனால் மும்பையில் இருந்து புறப்பட்டு நடுவானில் சென்ற போது விமானத்தின் ஒரு என்ஜின் பழுதாகி நின்றது. மேலும் விமானத்தின் உள்ளே ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்த விமானி உடனே சம்பவம் குறித்து மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

மும்பைக்கு திரும்பியது

இதனால் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. நடுவானில் சென்ற விமானம் கோயம்புத்தூர் செல்லாமல் மும்பை நோக்கி திரும்பியது. இது பற்றி அறியாத பயணிகள் விமான பணிப்பெண்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விமானத்தை ஒரு என்ஜினுடன் ஓட்டி வந்த விமானி மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். பின்னர் பயணிகள் இறக்கப்பட்டு மாற்று விமானத்தில் புறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த விமான சிவில் இயக்குனரக அதிகாரிகள் விமானத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story