சீர்காழி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஆய்வு


சீர்காழி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவெண்காடு,

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) எம்.எஸ்.பிரசாந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருவெண்காடு அருகே நாங்கூர் ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணியை கூடுதல் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் குளம் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் குளம் தூர்வாரும் பணி முடிந்தவுடன் குளத்தில் தண்ணீர் நிரப்பவும் கேட்டு கொண்டார். பின்னர் அவரிடம் அந்தபகுதி பொதுமக்கள் குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

வளர்ச்சி திட்ட பணிகள்

இதனை தொடர்ந்து கீழசட்டநாதபுரம் ஊராட்சியில் யோகீஸ்வரம் கோவில் குளம் தூர்வாரும் பணி, காத்திருப்பில் சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

ஆய்வின்போது சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், சீர்காழி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி, ஒன்றிய பொறியாளர் முத்துகுமார், உதவி பொறியாளர் தாரா, ஊராட்சி செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story