காரைக்காலில் இருந்து ராட்சத எந்திரம் வரவழைப்பு: ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தை மீட்கப்படும்


காரைக்காலில் இருந்து ராட்சத எந்திரம் வரவழைப்பு: ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தை மீட்கப்படும்
x
தினத்தந்தி 27 Oct 2019 5:00 AM IST (Updated: 27 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இருந்து ராட்சத எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தை மீட்கப்படும் என்று தீயணைப்பு துறை இயக்குனர் காந்திராஜன் கூறினார்.

மணப்பாறை,

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிண ற்றிற்காக தோண்டப் பட்ட குழியில் சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை நேற்று முன்தினம் மாலை 5.30 மணியில் விழுந்தான். குழந்தை சுர்ஜித் வில்சனை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கையில் தீயணைப்பு துறை, பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து உள்ளன.

இந்நிலையில் சம்பவ இடத்தில் தமிழ்நாடு தீயணை ப்பு துறை இயக்குனர் காந்திராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராட்சத எந்திரம்

குழந்தை சுஜித் வில்சன் விழுந்த ஆழ்துளை கிணற்றின் சுற்றளவு குறைவாக உள்ளது. இதனால், குழந்தையை கருவி மூலம் மீட்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. எனவே கிணற்றின் அருகே 3 மீட்டர் தொலைவில் 80 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அந்த குழியில் அனுபவம் வாய்ந்த 2 தீயணைப்பு வீரர்களை இறக்கி, குழந்தை இருக்கும் குழியின் பக்கவாட்டில் சுரங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்.

இந்த முறையில் குழந்தை மீட்பதற்கு சுமார் நான்கு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகும் என தெரிகிறது. ஒருவேளை குழிதோண்டும் போது கடினபாறைகள் இருந்தால் மேலும் சில மணி நேரம் தாமதம் ஆகலாம். ஆகவே இந்த முறையில் குழந்தையை கூடிய விரைவில் மீட்டுவிடுவோம். இதற்காக காரைக்காலில் இருந்து சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு உள்ள ராட்சத எந்திரம் வரவழைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story