கரும்பு நிலுவை தொகையை முழுவதும் வழங்க கோரி விவசாயிகள் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கரும்பு நிலுவை தொகையை முழுவதும் வழங்க கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ரூ.159 கோடி நிலுவை தொகை வழங்க வேண்டி இருக்கிறது. இந்த தொகையை வழங்க கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடியை மட்டும் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கியது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. நிலுவை தொகை முழுவதையும் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வந்த சூழ்நிலையில், அதில் ஒரு சிறிய தொகையை மட்டும் வழங்கியதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதை கண்டித்தும், நிலுவை தொகை வழங்காமல் இருக்கும் ஆலை உரிமையாளரை கைது செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும்,பொதுத்துறை கூட்டுறவு ஆலைகளுக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு தடை இல்லா சான்று வழங்குதல், இறையூர் தனியார் சர்க்கரை ஆலையை அரசு கையகப்படுத்திட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மலைப்பகுதி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆலை முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதற்கு இளவரசன், கொளஞ்சிநாதன், செல்வ குமாரி, அண்ணாதுரை, தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முடிவில் ஆலை பகுதி பொதுசெயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story