கிருஷ்ணகிரியில் 522 பயனாளிகளுக்கு ரூ.150 கோடி கடன் உதவிகள் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்


கிருஷ்ணகிரியில் 522 பயனாளிகளுக்கு ரூ.150 கோடி கடன் உதவிகள் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:30 AM IST (Updated: 27 Oct 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் 522 பயனாளிகளுக்கு ரூ.150 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் மாவட்ட வங்கியாளர்கள் குழுமத்தின் சார்பாக இரண்டு நாள் வாடிக்கையாளர் சந்திப்பு மற்றும் கடன் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித்துறை பொது மேலாளர் (இந்தியன் வங்கி) நாகராஜ், கோவை மண்டல இந்தியன் வங்கி கள பொது மேலாளர் சாப்பியா பாரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு 522 பயனாளிகளுக்கு ரூ.150 கோடி மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது:- மாவட்டத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் 2 நாட்கள் தொழில் முனைவோர் கடன் பெறுவதற்கான முகாம் நடைபெற்றது. கடன் பெற்றுள்ள 522 பயனாளிகள் நல்ல முறையில் தொழில் செய்து கடன்களை முறையாக திருப்பி செலுத்த வேண்டும்.

கடன் உதவி

தமிழக முதல்-அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.900 கோடி கடன் உதவி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்து ஆணையிட்டுள்ளார். கடந்த ஆண்டு ரூ.860 கோடி இலக்கு எய்தோம். இந்த ஆண்டு இதுவரை ரூ.420 கோடி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடன் உதவிகள் வரும் மாதங்களில் வழங்கப்பட்டு விடும். விவசாயிகளுக்கு அனைத்து வங்கிகளும் இணைந்து ரூ. 2,200 கோடி கடன் உதவிகள் வழங்க உத்தேசித்து இதுவரை ரூ.1,500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் மேற்கொள்வோர் வெளியிடங்களில் அதிக வட்டிக்கு பணம் வாங்ககூடாது என்ற அடிப்படையில் அரசு வழங்கும் இந்த திட்டங்களை பயன்படுத்தி வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் உதவிகள் பெற்று நல்ல முறையில் தொழில்கள் மேற்கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல பொது மேலாளர் திருமாவளவன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கரன், கார்ப்பரேசன் வங்கி மண்டல பொது மேலாளர் விட்டல் பாணசங்கரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல பொது மேலாளர் முரளி கிருஷ்ணரெட்டி, மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தாட்கோ மாவட்ட மேலாளர் சுந்தரம், துணை மேலாளர் ராஜகுரு மற்றும் அனைத்து வங்கிகள் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story