அரசு பள்ளிகளில் தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரசு பள்ளிகளில் தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 27 Oct 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீர அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தீ விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியன் முன்னிலை வகித்தார். போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முருகையன், ரமேஷ், முன்னாள் தலைமை ஆசிரியர் காளியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் கண்ணதாசன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் அலுவலர்கள் பாதுகாப்பான, மகிழ்ச்சியான, விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுரைகளையும் செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் முருகன், பூமணி, ஜெயசீலன், முத்துக்குமார், சரவணன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story