சட்டசபை தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட மந்திரியை நேரில் சந்தித்த சரத்பவார் பேரன்


சட்டசபை தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட மந்திரியை நேரில் சந்தித்த சரத்பவார் பேரன்
x
தினத்தந்தி 28 Oct 2019 4:45 AM IST (Updated: 28 Oct 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் தன்னால் வீழ்த்தப்பட்ட மந்திரி ராம் ஷிண்டேயை சரத்பவார் பேரன் ரோகித் பவார் நேரில் சந்தித்து பேசினார். மேலும் ஆதித்ய தாக்கரேக்கும் செல்போனில் வாழ்த்து கூறினார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேரன் ரோகித் பவார் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கர்ஜத்-ஜாம்கெட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தோ்தல் முடிவு வந்தவுடன், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய பா.ஜனதா மந்திரி ராம் ஷிண்டேயை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர், ராம் ஷிண்டேயின் செல்போனில் இருந்து யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரேயை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

அப்போது அவர், ஒர்லி தொகுதியில் பெற்ற வெற்றிக்காக ஆதித்ய தாக்கரேவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

சரத்பவாருக்கும், மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேக்கும் அரசியல் தாண்டிய நட்பு இருந்தது. அதன்பிறகு இரு குடும்பங்களை சேர்ந்தவர்களும் சரத்பவாா், பால் தாக்கரே அளவுக்கு நட்பு பாராட்டியதில்லை.

இந்தநிலையில் சரத்பவாரின் பேரன் ரோகித் பவார், ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற சிவசேனா இளைஞர் அணி தலைவா் ஆதித்ய தாக்கரேயை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய தாக்கரேவும், ரோகித் பவாரும் நட்புடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பால் தாக்கரேவின் மைத்துனர் சந்திரகாந்த் வைதியா தெரிவித்தார்.

Next Story