விராச்சிலை கிராமத்தில் மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் வாலிபர் பலி
விராச்சிலை கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் பலியானார்.
திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தில் தீபாவளியையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், திருமயம், சிவகங்கை, திருப்பத்தூர், கோனாபட்டு, கே.பள்ளிவாசல், கீழசீவல்பட்டி, பனையப்பட்டி, பொன்னமராவதி, சிங்கம்புணரி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. முதலில் கோவில் காளை திடலில் அவிழ்த்துவிடப்பட்டது.
தொடர்ந்து மற்ற காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் மடக்கி பிடித்தனர். பல காளைகள் இளைஞர்களிடம் சிக்காமல் துள்ளி குதித்து ஓடின.
வாலிபர் பலி
இதில் காளை முட்டியதில் மஞ்சுவிரட்டை பார்க்க வந்த மேலபனையூரைச் சேர்ந்த மருதப்பன் மகன் யோகநாதன் (வயது 18) படுகாய மடைந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த யோகநாதனையும், லேசான காயமடைந்தவர்களையும் சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகநாதன் பரிதாபமாக இறந்தார்.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானவர்கள் வந்து மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விராச்சிலை கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டு தடையை மீறி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story