தீபாவளி பண்டிகையையொட்டி, 2 நாட்களில் மதுபான விற்பனை ரூ.11 கோடி
தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.11 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது.
திண்டுக்கல்,
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி பட்டாசுகளை வெடித்து நண்பர்கள், உறவிர் களுடன் சேர்ந்து பலகாரங் களை சாப்பிட்டு என பண்டிகை கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும்.
அதே போல் மது விருந்து கொண்டாட்டங்களும் ஒருபுறம் அரங்கேறும். அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. மதுபான கடைகள் திறப்பதற்கு முன்பே கடைகளின் வாசலில் மதுபான பிரியர்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 154 மதுபான கடைகள் உள்ளன. இவற்றில் தினசரி ரூ.3 கோடி வரை மதுபானம் விற்பனை ஆகும். பண்டிகை காலங்கள் என்றால் இந்த விற்பனை சற்று அதிகரிக்கும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 26-ந்தேதி மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்கள் மதுபான விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த 26-ந்தேதி மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் ரூ.5 கோடியே 32 லட்சத்துக்கு மதுபானம் விற்பனை ஆனது.
தீபாவளி பண்டிகை தினமான நேற்று முன்தினம் ரூ.5 கோடியே 75 லட்சத்துக்கு மதுபானம் விற்கப்பட்டது. 2 நாட்களில் மொத்தம் ரூ.11 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. மது விருந்து கொடுத்து உற்சாகமாக பண்டிகை கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் மதுபோதை தலைக்கேறி பொது இடங் களில் பலர் விழுந்து கிடப்பதையும் காண முடிந்தது.
Related Tags :
Next Story