கடந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை அதிகாரிகள் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களில், கரூர் டாஸ்மாக் கடைகளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூர்,
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கியும் மக்கள் கொண்டாடினர். சினிமா ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று தங்களது நடிகர்களின் படங்களை கண்டுகளித்தனர்.
மது பிரியர்கள் மது அருந்தி பண்டிகை கால மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால், கரூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாரிகள் தகவல்
தீபாவளி மது விற்பனை குறித்து கரூர் டாஸ்மாக் வட்டாரத்தில் விசாரித்தபோது அதிகாரிகள் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து கரூர் மாவட்டத்தில் சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது 89 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பசுபதிபாளையத்தை அடுத்த சணபிரட்டி அருகே டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்படுகிறது.
இதனையொட்டி உள்ள குடோனில் இருந்து தான் டாஸ்மாக் கடைகளுக்கு, மதுபாட்டில்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த குடோனில் மதுபாட்டில்களை போதுமான அளவு இருப்பு வைத்திருந்தோம். அந்தவகையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. சராசரியான நாட்களை விட அன்றைய தினம் அதிகமாக விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், பெரியஅளவில் வித்தியாசம் ஏதுமில்லை. பீர் வகைகளை விட பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
ரூ.9 கோடிக்கு மது விற்பனை
தீபாவளியையொட்டி கடந்த 24-ந் தேதி ரூ.1 கோடியே 46 லட்சத்துக்கும், 25-ந்தேதி ரூ.1 கோடியே 95 லட்சத்து 32 ஆயிரத்துக்கும், 26-ந்தேதி (தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை) ரூ.2 கோடியே 88 லட்சத்துக்கும் கரூர் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன.
கடந்த 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் மட்டும் ரூ.9 கோடியே 9 லட்சத்து 32 ஆயிரத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. இதில் பீர் வகைகள் 11 ஆயிரம் பெட்டிகளும், மதுபான வகைகள் 13 ஆயிரம் பெட்டிகளும் விற்றுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டிலும் தீபாவளியையொட்டிய 4 நாட்களில் ரூ.9 கோடி அளவுக்கு மது விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஆண்டு 92 டாஸ்மாக் கடைகளில் செயல்பட்டதில் 3 கடைகள் மூடப்பட்டு விட்டன. ஓட்டல் பார்களில் விற்கப்படும் மது வகைகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story