மதகடிப்பட்டு பாளையத்தில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
மதகடிப்பட்டுபாளையத்தில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
திருபுவனை,
மதகடிப்பட்டுபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் (காம்பவுண்டு சுவர்) ஏற்கனவே இடிந்து விழும் நிலையில் மோசமாக இருந்தது. தற்போது பெய்து வரும் மழையினால் அது மேலும் வலுவிழந்த நிலையில் காணப்பட்டது.
நேற்றைய தினம் விடுமுறை என்பதால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் பள்ளி வளாகத்திற்குள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சிலர் சுற்றுச்சுவர் மீது ஏறியதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த சுற்றுச்சுவர் சுமார் 2 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக சுவர் யார் மீதும் விழவில்லை. சுற்றுச்சுவர் மோசமான நிலையில் இருப்பதால் அதை முழுவதையும் அகற்றிவிட்டு புதியதாக கட்டவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :
Next Story