தழையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை


தழையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2019 4:30 AM IST (Updated: 29 Oct 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

தழையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் தற்போது விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் நிலையங்கள் வாங்க மறுப்பதால் நெல்லை காய வைத்து கொண்டு விவசாயிகளும் கொள்முதல் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர்.

எனவே அரசு 20 சதவீதம் வரை ஈரப்பதத்தை அனுமதித்து நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். நன்னிலம் வட்டம் தழையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

பாலம், சாலை வசதி

பனங்காட்டாங்குடியில் பாசன வாய்க்கால்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதால் 48 வேலி சாகுபடி நிலங்கள் மழையை மட்டுமே நம்பியுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி பாசன வாய்க்கால்களை மீட்டு தர வேண்டும்.

வேலங்குடி ஊராட்சி கமுகக்குடியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாமல் உள்ளது. மேலும் வாய்க்காலை கடந்து செல்ல பாலம் இல்லாததாலும் இப்பகுதியில் இறந்து போகின்றவர்களின் உடல் களை ஆற்று நீரில் கடந்து சுமந்து சென்று சுடுகாட்டில் இறுதி சடங்குகளை செய்ய வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாலம் மற்றும் சாலை வசதிகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story