குமாரபாளையம் எதிர்மேடு பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க, குமாரபாளையம் எதிர்மேடு பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம்,
குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியான வட்டமலை எதிர்மேடு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த பகுதியில் மாதத்தில் 4 அல்லது 5 விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
எதிர்மேடு வட்டமலை பகுதியில் தனியார் கல்லூரிகள், மில்கள், விசைத்தறி கூடங்கள், பள்ளிக்கூடங்கள், முதியோர் இல்லம் போன்றவை ஏராளமாக உள்ளன. மேலும் பைபாஸ் ரோட்டின் இருபுறங்களிலும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ரோட்டின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறம் செல்ல சேலம் - கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டி உள்ளது. இதனால் மிக வேகமாக பைபாஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.
இவற்றிற்கு ஒரு தீர்வு காண வலியுறுத்தி அரசிற்கு பல கட்டங்களாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். கடந்த மாதத்தில் மட்டும் தாய், மகள் உள்பட 4 பேர் வட்டமலை பகுதியில் விபத்தில் இறந்துள்ளனர்.
எனவே அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க, குமாரபாளையம் எதிர்மேடு பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசுக்கு நினைவூட்டும் விதமாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story