அஞ்செட்டி அருகே பெண் யானை திடீர் சாவு


அஞ்செட்டி அருகே பெண் யானை திடீர் சாவு
x
தினத்தந்தி 29 Oct 2019 4:00 AM IST (Updated: 29 Oct 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே பெண் யானை ஒன்று திடீரென இறந்தது.

தேன்கனிக்கோட்டை,

அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பனைகிழக்கு வனப்பகுதியில் உள்ள ஜோடு குட்டை என்ற இடத்தில், கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ளாமல் 45 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.

சிறிது தூரம் கூட நடந்து செல்ல முடியாமல் யானை சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிக்கு தகவல் தெரிவித்தனர். அவருடைய உத்தரவின் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானையை பார்வையிட்டனர். பின்னர் அந்த யானை வயது முதிர்வு காரணமாக சிரமப்பட்டு வருகிறதா? அல்லது நோய்வாய்பட்டு உணவு உட்கொள்ள முடியாமல் தவிக்கிறதா? என தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டதால், அஞ்செட்டி வனச்சரகர் ரவி தலைமையில், கால்நடை டாக்டர் கள் ஆலோசனையின் படி, வாழைப்பழத்தில் மருந்துகள் வைத்து வனத்துறையினர் கொடுத்து வந்தனர். இருப்பினும் கடந்த 2 நாட்களாக யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த யானை திடீரென இறந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், யானையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே இடத்தில் வனத்துறையினர் யானையை அடக்கம் செய்தனர்.

Next Story