மாவட்ட செய்திகள்

67 தீ விபத்துகள்:சென்னையில், பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம்சிறுவனின் கண்பார்வை பறிபோனது + "||" + In Chennai, 85 people injured in crackers

67 தீ விபத்துகள்:சென்னையில், பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம்சிறுவனின் கண்பார்வை பறிபோனது

67 தீ விபத்துகள்:சென்னையில், பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம்சிறுவனின் கண்பார்வை பறிபோனது
சென்னையில் நேற்று 67 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒரு சிறுவனுக்கு கண்பார்வை பறிபோனது.
சென்னை,

சென்னையில், நேற்று முன்தினம் தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 67 அழைப்புகள் வந்திருக்கின்றன. இதில் 26 அழைப்புகள் சிறிய அளவிலான பட்டாசு விபத்துகள் ஆகும். மீதமுள்ள 41 அழைப்புகளும் எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய தீ விபத்துகள் ஆகும்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று 31 பேர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி ஆய்வு செய்தார்.

53 பேர் சிகிச்சை

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே பட்டாசு வெடித்து உண்டான தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்தில் 53 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கண்பார்வை பறிபோனது

இதில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 12 வயது சிறுவன் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது வெடித்து சிதறிய பட்டாசு சிறுவனின் வலது கண்ணில் பட்டது.

இதில் வலியால் துடித்த சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிறுவனின் வலது கண் பார்வை பறிபோனது.

சென்னையில் நேற்று மொத்தம் 85 பேர் தீக்காயத்துக்கான சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதுதவிர சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைகளில் நேற்று தீக்காய சிகிச்சைக்காக யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்
சென்னை திருவான்மியூரில் மனைவியை தாக்கியதாக டி.வி. நடிகர் கைது செய்யப்பட்டார்.
2. சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோவில் கட்டப்படும் தேவஸ்தான தலைவர் பேட்டி
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிய கோவில் கட்டப்படும் என தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
3. சென்னையில், அரசு பஸ்-கன்டெய்னர் லாரி மோதல்; கண்டக்டர் பலி 13 பேர் படுகாயம்
சென்னை பாடி அருகே அதிகாலையில் கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதிய பயங்கர விபத்தில், பஸ் கண்டக்டர் பலியானார். டிரைவர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. சென்னையில், குடிநீர் வாரிய பெண் என்ஜினீயர் கைது
சென்னையில் குடிநீர் வாரிய பெண் என்ஜினீயர் கைது. ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.
5. சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்
சென்னை அண்ணா சாலை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.