கோவிந்தவாடி கோவிலில் குருபெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் குவிந்தனர்
கோவிந்தவாடி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம்,
கடந்த ஆண்டு விருச்சிக ராசியில் பிரவேசித்த குரு பகவான், நேற்று அதிகாலை 3.42 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடியில் உள்ள புகழ்பெற்ற குரு பகவான் கோவிலில் நேற்று குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரைப்பட நடிகை ரோஜா, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை வழிபட்டனர்.
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் முடங்கு வீதியில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
குருபெயர்ச்சியையொட்டி நேற்று திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்கா நகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு யோக ஞான தட்சிணாமூர்த்தியை வழிபட்டார். கோவில் சார்பில் அவருக்கு ஞான தட்சிணாமூர்த்தி படம் வழங்கப்பட்டது.
பின்னர் ஞானமங்கல சனீஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், கோவில் ஸ்தாபகர் என்.வெங்கட்ராம சர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் வடகுரு ஸ்தலமான குருதட்சிணாமூர்த்தி கோவிலில் பூர்ணாகுதி நிறைவுபெற்று குருதட்சிணாமூர்த்திக்கு 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் நிறைந்த கலச நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஹோமங்களும், பரிகார பூஜைகளும் நடைபெற்றன. இதில் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் குரு பகவானுக்கு என்று தனி சன்னதி பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோவிலில் உள்ளது. அந்த கோவிலில் நேற்று நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.

Related Tags :
Next Story