மனித உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு: புதுச்சேரியில் இன்று நடக்கிறது


மனித உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு: புதுச்சேரியில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 Oct 2019 4:15 AM IST (Updated: 29 Oct 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

மனித உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு புதுச்சேரியில் இன்று நடக்கிறது.

புதுச்சேரி,

புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப் பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இயங்கி வரும் சட்டசேவை மையமும், புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து மனித உரிமைகள் பாதுகாப்பு-இன்றைய இந்தியாவின் பார்வை குறித்து ஒருநாள் கருத்தரங்கு இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஓட்டல் அதிதியில் நடக்கிறது. இதன் தொடக்கவிழாவில் புதுவை மாநில மனிதஉரிமை குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் தலைமை தாங்குகிறார். வரலாற்று துறை தலைவர் மெர்சி தேன்மொழி வரவேற்று பேசுகிறார்.

மாவட்ட நீதிபதி சோபனாதேவி சிறப்புரையாற்றுகிறார். தொழில்நுட்ப கல்லூரி கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி மற்றும் கல்லூரியின் தலைவர் சுப்ரமணி ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்ற உள்ளனர். உதவி பேராசிரியர் காயத்திரி விளக்க உரையாற்றுகிறார்.

தொடக்க விழாவினை தொடர்ந்து கருத்தரங்கு 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் தனபால், ஐகோர்ட்டு மதுரை கிளை வக்கீல் கருணாநிதி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணை பேராசிரியர் அமுதா ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்ற உள்ளனர். முடிவில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் சட்டசேவை மையத்தின் சேர்மன் அலமேலு மங்கை நன்றி கூறுகிறார்.

Next Story