கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறிய ரக போர் விமானம்


கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறிய ரக போர் விமானம்
x
தினத்தந்தி 30 Oct 2019 3:30 AM IST (Updated: 29 Oct 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறிய ரக போர்விமானத்தை பொதுமக்கள் பார்வை யிட விரைவில் அனுமதி அளிக்கப்படும்.

கோவை,

கோவை ரெயில் நிலையம் அருகே கோவை மாநகர காவல்துறைக்கு சொந்தமான போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு காவல்துறையில் உள்ள பிரிவுகள், அந்த துறையில் பயன்படுத்தும் ஆயுதங்கள், கருவிகள், பல்வேறு பிரிவுகளின் சீருடைகள் உள்பட பல்வேறு பொருட்கள் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சந்தன கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் பயன்படுத்திய துப்பாக்கிகள், விடுதலை புலிகளின் சிறிய அளவிலான படகு, கடற்கரை போலீசார் ரோந்து செல்லும் படகு, ராஜாக்கள் பயன்படுத்திய பீரங்கி, ராணுவத்தில் பயன்படுத்திய டாங்கி உள்பட பல்வேறு பொருட்கள் உள்ளன.

இந்த போலீஸ் அருங்காட்சியகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது இங்கு தாம்பரத்தில் உள்ள விமான படைத்தளத்தில் இருந்து சிறிய ரக போர் விமானம் லாரி மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவற்றை அங்கு பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, கோவைக்கு கொண்டு வரப்பட்டு உள்ள சிறிய ரக விமானம் போர்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட வசதியாக கோவைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த வார இறுதிக்குள் அவற்றை பொருத்தி விடுவோம். அதன்பின்னர் அதை பொதுமக்கள் தாராளமாக பார்வையிடலாம். இதுதவிர இன்னும் சில பொருட்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story