திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன உரிமை யாளர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் எறையாமங்கலம் கிராமம் ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 45). இவர் மப்பேடு கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். இவருக்கு கலைச்செல்வி (40) என்ற மனைவியும், சரவணன்(19), ராஜ்குமார் (18 ) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
சொக்கலிங்கம் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் பணம் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பி தருமாறு அவரை நாடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை திருவள்ளூரை அடுத்த சத்தரை அருகே உள்ள வேப்பமரத்தின் அருகே சொக்கலிங்கம் பூச்சி மருந்து (விஷம்) இறந்து கிடந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story