பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் - நாராயணசாமி உத்தரவு


பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் - நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2019 4:15 AM IST (Updated: 30 Oct 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:-

திருச்சியில் சுஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக் குள் விழுந்து உயிருக்கு போராடியது. அந்த குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்தது.

நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆனால் துர திர்ஷ்டவசமாக அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அந்த குழந்தையின் குடும்பத்தின ருக்கு என் சார்பிலும், புதுவை மக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தின் மூலம் 2 பாடங்களை கற்றுள் ளோம். ஒன்று பயனற்று உள்ள ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடவேண்டும். மற்றொன்று இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவேண்டும்.

சிறுவனின் மரணம் நம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுவையில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளேன். வரு வாய்த்துறை, தீயணைப்புத் துறை ஊழியர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.

புதுவை மாநிலத்தில் இதே போல் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் மீட்பு பணிக்கு தேவைப்படும் எந்திரங்கள் வாங்குவது மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்களை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story