பாளையங்கோட்டையில் சுற்றுலா கார் கவிழ்ந்து கர்நாடக வாலிபர் பலி


பாளையங்கோட்டையில் சுற்றுலா கார் கவிழ்ந்து கர்நாடக வாலிபர் பலி
x
தினத்தந்தி 30 Oct 2019 4:00 AM IST (Updated: 30 Oct 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் சுற்றுலா கார் கவிழ்ந்த விபத்தில் கர்நாடக வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை, 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் ஒரு காரில் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். இவர்களது கார் நேற்று காலை பாளையங்கோட்டை தியாகராஜநகர் 4 வழிச்சாலையில் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோவிந்தராஜ் (வயது 29) என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story