ஓசூர் அருகே நெல் வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
ஓசூர் அருகே நெல் வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூர்,
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இடம் பெயர்ந்து, ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் ஆகிய காடுகளில் பதுங்கி உள்ளன. இந்த யானைகள் தனித்தனியாகவும், குழுக்களாகவும் பிரிந்து அருகிலுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதில் இருந்து பிரிந்து சென்ற ஒரு காட்டு யானை, கடந்த 5 நாட்களுக்கு முன்பு போடூர்பள்ளம் காட்டில் இருந்து வெளியேறி, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து, புக்கசாகரம், சுன்டட்டி ஆகிய கிராமங்களில் சுற்றித்திரிந்தது. மேலும், சுன்டட்டி கிராமத்தில் ஒரு மாட்டை தாக்கியது.
இந்த காட்டு யானையின் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து வனத்துறையினர் விரைந்து சென்று, பட்டாசு வெடித்து யானையை பேரண்டபள்ளி காட்டுக்கு விரட்டி அடித்தனர். இவ்வாறாக, தனித்தனியாகவும், கும்பலாகவும் யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், போடூர்பள்ளம் காட்டில் இருந்து 2 யானைகள் வெளியேறி அருகிலுள்ள ஆழியாளம், போடூர், ராமாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குள் புகுந்தன. பின்னர், அந்த யானைகள் அதேபகுதியை சேர்ந்த அம்மையம்மா, கிருஷ்ணப்பா, வெங்கட்ராஜ், ரமேஷ், வசந்தகுமார் உள்ளிட்ட விவசாயிகளின் நெல் வயல்களில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தி விட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டன.
இதனிடையே நேற்று காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது நெற்பயிர்களை யானைகள் அட்டகாசம் செய்திருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் யானைகள் நெல் வயலில் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மேலும் கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர். போடூர்பள்ளம் மற்றும் சானமாவு வனப்பகுதிகளில் பதுங்கியுள்ள யானைகளை உடனடியாக அடர்ந்த காட்டுப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story