குழந்தை சுஜித் வில்சன் சாவு: பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
குழந்தை சுஜித் வில்சன் சாவு: பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
தரகம்பட்டி,
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சன் மீட்பு குழுவினரின் கடும் போராட்டத்துக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டான். அந்த குழந்தைக்கு கடவூர் ஊராட்சி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வக்குமார் தலைமையில் மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் சுஜித் வில்சனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களும் ஆங்காங்கே தெருக்களில் அஞ்சலி கூட்டம் நடத்தினர். அப்போது பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறுகளை மூடிடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Tags :
Next Story