சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 Oct 2019 4:15 AM IST (Updated: 30 Oct 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம், 

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அம்மாசி நகர் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 30). இவர், கடந்த 3-ந் தேதி குகை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.5,200-ஐ பறித்து சென்றார். மேலும், அங்கு வந்த பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அலாவுதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே, அலாவுதீன் தனது கூட்டாளி அமர்நாத் என்பவருடன் சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு செவ்வாய்பேட்டை வாசக சாலை தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது காரை சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு 76 வயது மூதாட்டி ஒருவரை கொலை செய்து அவரது வீட்டில் 62 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார். இதனால் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், கொலை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அலாவுதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு செவ்வாய்பேட்டை போலீசார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து தொடர் குற்றச்செயல் களில் ஈடுபட்ட அலாவுதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்து நேற்று கமிஷனர் செந்தில்குமார் உத்தர விட்டார்.

Next Story