தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மதுரை வந்தார்


தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மதுரை வந்தார்
x
தினத்தந்தி 30 Oct 2019 3:45 AM IST (Updated: 30 Oct 2019 5:37 AM IST)
t-max-icont-min-icon

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார்.

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா இன்று(புதன்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கார் மூலம் நேற்று மதுரை வந்தார்.

அவருக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். வரவேற்பு நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராமலிங்கம், தங்கம் தென்னரசு, மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணி அளவில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story