மாவட்டத்தில், 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 18 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 12 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக இன்றும், நாளையும் 84.2 டிகிரியாகவும், நாளை மறுநாள் 86 டிகிரியாகவும் இருக்கும். குறைந்தபட்சமாக இன்றும், நாளையும் 73.4 டிகிரியாகவும், நாளை மறுநாள் 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 95, 95, 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 75, 70, 60 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதை தொடர்ந்து, தெற்கு மற்றும் கிழக்கு மற்றும் உள்மாவட்டங்கள் அனைத்திலும் பருவமழை பெய்யும். நாமக்கல்லிலும் பெரும்பாலான இடங்களில் அதன் தாக்கம் காணப்படும். பரவலான மழை காரணமாக கோழிகளில் தீவன எடுப்பு அதிகரித்து காணப்படும். தீவனத்தில் அதிக எரிசக்தி கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story