மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை + "||" + Anand warned of serious action if digging of deep well without permission

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகள் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் பயன்பாட்டில் இல்லாமல் ஆபத்தான நிலையில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் இருப்பின் அது தொடர்பான தகவலை பொதுமக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தாரிடம் தெரிவிக்க வேண்டும்.


பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு மூடப்படாமல் உள்ள பயனற்ற, ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் தூர்ந்துபோன திறந்தவெளி கிணறுகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புனரமைப்பு

மேலும் தனியார் நிலங்களில் மூடப்படாமல் பயன் பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிதாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறு அமைப்பவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புனரமைப்பு பணி செய்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

பணி மேற்கொள்ளும்போது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் கடைபிடிக்கப்படாவிடில் உரிமையாளர் மற்றும் அப்பணியை மேற்கொள்ளும் நபர் மீது விதிமுறைகள்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான ரிக் எந்திரம் வைத்திருப்பவர்கள் மாவட்ட கலெக்டரிடம் பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். பணியின்போது அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாவிட்டால் பதிவு சான்று ரத்து செய்யப்படும்.

கடும் நடவடிக்கை

உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறாமல் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், புதிய கிணறுகள் தோண்டுதல் ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்துதல், புனரமைப்பு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டால் உரிமையாளர் மீதும் அப்பணியை மேற்கொள்பவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
2. கீழையூர் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு
கீழையூர் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
3. புதிய தடுப்பணைகள் ஏற்படுத்தி ரூ.338¾ கோடியில் நீர் மின்நிலையம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு
புதிதாக தடுப்பணை அமைத்து ரூ.338¾ கோடியில் நீர் மின்நிலையம் அமையும் இடத்தை கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.
4. நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.
5. அணைகள், மறுகால் ஓடைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வேண்டுகோள்
அணைகள், மறுகால் ஓடைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.