அரசு பள்ளியில் அறிவியல் ஆய்வகம் திறப்பு
பெரம்பலூரை அடுத்த காரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ரூ.20 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் நிதிஉதவியுடன் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூரை அடுத்த காரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ரூ.20 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் நிதிஉதவியுடன் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. முப்பரிமாண வடிவப்பொருட்களின் காட்சி அமைப்பு (3டி), சிறிய அளவிலான ரோபோ எந்திரங்கள், மின்காந்த மோட்டார்கள் மற்றும் அனைத்து வகையான எந்திரவியல் கருவிகள் இந்த ஆய்வகத்தில் இடம்பெற்றுள்ளன. இதனைக்கொண்டு மாணவர்கள் தங்களது அறிவியல் தொழில்நுட்ப அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளமுடியும். இந்த ஆய்வகத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன் திறந்து வைத்தார். இதில் வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உதவி தலைமை ஆசிரியர் தனபால், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரசேகரன், முன்னாள் தலைவர் நீலராஜ், பள்ளி கட்டிடக்குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story