மாவட்ட செய்திகள்

கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு + "||" + Heavy rain in Kalvaramanai area: Gomukhi Dam rises by 44 feet

கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு

கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு
கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் அணையில் இருந்து கோமுகி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக கல்படை, பொட்டியம் ஆறுகள் வழியாக தண்ணீர் வரும். அவ்வாறு வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தேக்கி வைப்பார்கள். மேலும் இந்த அணையின் பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்வராயன் மலையில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கோமுகி அணை தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனிடையே கடந்த சில வாரங்களாக கல்வராயன்மலையில் பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 43 அடியை எட்டியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு 1 மணி வரை கல்வராயன்மலையில் பலத்த மழை பெய்ததால் கல்படை, பொட்டியம் ஆறுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தது. தொடர் நீர்வரத்து காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் நள்ளிரவில் 44 அடியாக உயர்ந்தது. இதற்கிடையே கல்வராயன்மலையில் மழை குறைந்ததால் ஆறுகள் வழியாக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி தேக்கி வைத்ததோடு, அணைக்கு வரும் ஆயிரம் கனஅடி நீரை கோமுகி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர்.

இதுகுறித்து கோமுகி பாசன விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக கல்வராயன்மலையில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. இதனால், அணை கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணை நிரம்பியதாலும் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள என்னை போன்ற விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழையினால் முழு கொள்ளளவை எட்டியது: வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
தொடர் மழையின் காரணமாக வீடூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
2. தண்ணீர் திறப்பு எதிரொலி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்
வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
3. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது
40 ஆண்டுகளுக்குப் பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியுள்ளது.
4. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
5. பாசனத்துக்காக 30-ந் தேதி தண்ணீர் திறப்பு: கோமுகி அணையில் பராமரிப்பு பணி தீவிரம்
பாசனத்துக்காக 30-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கோமுகி அணையில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.