திருவண்ணாமலையில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், வேளாண் சார்ந்த மற்றும் சாராத பொருட்கள் உற்பத்தி, விற்பனை தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படு கிறது.
இந்த கணக்கெடுப்பு பணி கள் தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, அரசு பொது சேவை மையம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள சிவா எலக்ட்ரானிக்ஸ் விற்பனை கடையில் நடந்தது.
இந்த கணக்கெடுப்பு பணியை கலெக்டர் கே.எஸ். கந்தசாமி தொடங்கி வைத் தார். இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, புள்ளியியல் துறை துணை இயக்குனர் எஸ்.ஜேக்கப் வேதகுமார், பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், கண்காணிப் பாளர் மதிவாணன், சிவா எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் விமல், தாசில்தார் அமுல் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
தொடர்ந்து திருவண்ணா மலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரே போக்குவரத்து சந்திப்பினை நெடுஞ்சாலைத் துறை மூலமாக மேம்படுத்து வதற்கான முதல் கட்ட ஆய்வுப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
மேலும் திருவண்ணாமலை நகராட்சி அறிவொளி பூங்காவை சீரமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வுப் பணி களையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
அப்போது நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் முரளி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந் தனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ‘தேசிய ஒற்றுமை நாள்’ உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் எடுக்கப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story