கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது
மயிலாடுதுறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், பா.ஜனதா கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மோடிகண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முரளி, வார்டு தலைவர் சேகர், மாநில செயலாளர் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தின்போது மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் தூக்கனாங்குளம் தென்கரையில் இருந்து தனியூர் செல்லும் வழியில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது. அந்த கழிவுகளை கொட்ட மாற்று இடம் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். வைரஸ் நோய்களை ஏற்படுத்தும் பன்றிகளை வளர்க்க மயிலாடுதுறை நகராட்சி தடை செய்ய வேண்டும்.
இறந்துபோன பன்றிகளை சாலையோரங்களில் வீசி செல்லாமல், அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மயிலாடுதுறையில் உள்ள 19, 21 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story