மாவட்ட செய்திகள்

மார்த்தாண்டத்தில் மெத்தை விற்பது போல் நடித்து வீட்டில் திருடிய 5 பேர் கைது + "||" + Selling mattresses in mortuary 5 persons arrested for stealing home

மார்த்தாண்டத்தில் மெத்தை விற்பது போல் நடித்து வீட்டில் திருடிய 5 பேர் கைது

மார்த்தாண்டத்தில் மெத்தை விற்பது போல் நடித்து  வீட்டில் திருடிய 5 பேர் கைது
மார்த்தாண்டத்தில் மெத்தை விற்பது போல் நடித்து வீட்டில் திருடிய 5 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,

மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியில் உள்ள ஜெபின் என்பவர் வீட்டுக்கு மெத்தை விற்க 5 பேர் வந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் மெத்தை குறித்து விற்க வந்தவர்களிடம் கேட்டனர். பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்று விட்டனர். அதன்பிறகு பார்த்த போது, வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை காணவில்லை.


இதனால் சந்தேகம் அடைந்த ஜெபின், வீட்டில் அமைத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது, மெத்தை விற்க வந்தவர்களில் ஒருவர் கியாஸ் சிலிண்டரை திருடி காரில் எடுத்து வைத்த காட்சி பதிவாகி இருந்தது. இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த கும்பல் காரில் வந்து மெத்தை விற்பது போல் நடித்து வீட்டில் திருடியது தெரிய வந்தது.

5 பேர் கைது

இந்த நிலையில் மெத்தை விற்கும் கும்பல் களியக்காவிளை பகுதியில் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று 5 பேர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜஹாங்கீர் (வயது 37), ஆஷ்ரப் (49), சபீக் (29), பாறசாலையை சேர்ந்த முகமது ரபீக்(45), சுலைமான்(59) என தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்து கியாஸ் சிலிண்டரை மீட்டனர். வேறு இடங்களில் இது போல் கைவரிசை காட்டி உள்ளனரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் இருந்த மிக்சியை விற்று மது வாங்கியதால் ஆத்திரம்: தையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி கைது
திருப்பூர் அருகே வீ்ட்டில் இருந்த மிக்சியை விற்று மது வாங்கிய தையல் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
2. சேலத்தில் குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது
சேலத்தில் குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
3. தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடிய டிரைவர் கைது
தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.